Tamil Language Literary Aptitude Test


தமிழ்மொழி இலக்கியத்  திறனறித் தேர்வு

இத்தேர்வு மேல்நிலை முதலாமாண்டு மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 1500 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்குக் கல்வித் துறை வழியாக மாதம் 1500 ரூபாய் வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.

இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர்களும் மீதமுள்ள ஐம்பது விழுக்காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட தனியார் பள்ளி மாணவர்களும் தேர்வு செய்யப்படுவார்கள்.

தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு நிலையிலான பாடத்திட்ட அடிப்படையில் கொள்குறிவகை தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட தலைநகரங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படும்.

இந்த கல்வியாண்டில் எம் பள்ளியைச் சேர்ந்த மாணவி சா . இலக்கியா 97 மதிப்பெண்களுடன் கோவை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மேலும் விருதுநகரில் நடைபெற்ற பலவிதமான போட்டிகளிலும் பங்கு கொண்டு , இரண்டாம் சுற்றில் கவிதை எழுதுதல், சிறுகதை எழுதுதல் ஆகிய போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டியில் சிறுகதை எழுதும் போட்டியில் முதலிடத்தைப் பெற்று அதற்கான பரிசுத்தொகையினையும் கேடயத்தையும் பெற்றுள்ளார்.

இரண்டாம் சுற்றில் கவிதை எழுதுதல், சிறுகதை எழுதுதல் ஆகிய போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டியில் சிறுகதை எழுதும் போட்டியில் முதலிடத்தைப் பெற்று அதற்கான பரிசுத்தொகையினையும் கேடயத்தையும் பெற்றுள்ளார்.

இந்தக் கல்வியாண்டில் 2024- 25 நடைபெற்ற தமிழ் இலக்கியத் திறனறித் தேர்வில் கோவை மாவட்டத்திலிருந்து 17 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு விருதுநகருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்

.

இரண்டாவது திருக்குறள் மாணவர் மாநாடு விருதுநகரில் நடைபெற்றது .மாநாட்டில் பங்கேற்கும் மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே விவாத மேடை மண்டல வாரியாக நடத்தப்பட்டு அதில் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர் .விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி   வளாகத்தில் மாணவர்கள் நுழைந்தவுடன் அவர்களுக்குப் பங்கேற்புச் சான்றிதழ், பரிசுகள், அடையாள அட்டை ஆகியவை வழங்கப்பட்டன. மறுநாள் விருதுநகர் ஆட்சியாளரின் வரவேற்பு உரையுடன் விழா இனிதே தொடங்கப்பட்டது. விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களும் மற்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும் காணொளியில் மாணவர்களை வாழ்த்திப் பேசினர். பின்பு பர்வீன் சுல்தானா பாரதி கிருஷ்ணகுமார் ,என். ஆர். ஐ எஸ். அகாடமி நிறுவனர் விஜயாலயன் ,நெடுஞ்செழியன் ,நெல்லை ஜெயந்தன் ஆகியோரும் தன்னம்பிக்கை சொற்பொழிவுகளை நிகழ்த்தினார்.

ஓவியக் கண்காட்சியும் இசை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன .வினாடிவினா, சிறுகதை எழுதுதல், கவிதை எழுதுதல் ஆகிய போட்டிகளும் நடைபெற்றது. கே. வி. எஸ். பள்ளியில் 895 மாணவர்களையும் குழுவிற்கு 40 பேராக பிரித்து பல குழுக்களை அமைத்தனர். அன்றைய சுற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட 12 மாணவர்களின் கவிதைகள் சிறுகதைகள் வாசிக்கப்பட்டன. சிறுகதை ,கவிதை படைக்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலுடன் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் பிப்ரவரி ஒன்றாம் தேதி நடைபெற்ற இறுதிப்போட்டியில் கவிதை, சிறுகதை இரண்டிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இறுதிப்போட்டி நடத்தப்பட்டது. இறுதி போட்டியில் நம் பள்ளி மாணவி இலக்கியா அவர்களும் பங்கு கொண்டார். இறுதிப் போட்டிக்கு பிறகு கவிதை சிறுகதை வினாடி வினா விவாத மேடை ஆகியவற்றில்  வெற்றி பெற்றவர்களுக்குப் பாராட்டு சான்றிதழ்களும் பரிசுகளும் கேடயங்களும் வழங்கப்பட்டு ஊக்குவிக்கப்பட்டது. நிறைவாக விருதுநகர் ஆட்சியாளரின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவேறியது.

இத்தேர்வில் இந்த கல்வியாண்டில் எம் பள்ளியைச் சேர்ந்த மாணவி சா . இலக்கியா 97 மதிப்பெண்களுடன் கோவை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.மேலும் விருதுநகரில் நடைபெற்ற பலவிதமான போட்டிகளிலும் பங்கு கொண்டு , இரண்டாம் சுற்றில் கவிதை எழுதுதல், சிறுகதை எழுதுதல் ஆகிய போட்டிகளில் தேர்வு செய்யப்பட்டு இறுதிப்போட்டியில் சிறுகதை எழுதும் போட்டியில் முதலிடத்தைப் பெற்று அதற்கான பரிசுத்தொகையினையும் கேடயத்தையும் பெற்றுள்ளார்.

தனது மழலை வகுப்பு முதலே வித்யா விகாசினியில் பயின்று வந்தவர் . பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 493 மதிப்பெண்களுடன் பள்ளியில் முதலிடம் பெற்றவர் .